ஹோட்டல் உடுப்பி சாம்பார் செய்வது எப்படி?

By தேஜஸ்

தேவையான பொருட்கள்

1/2 கப் துவரம் பருப்பு
1/4 கிராம் முருங்கைக்காய், கத்தரிக்காய், சௌசௌ
10 சின்ன வெங்காயம் முழுதாக
1 தக்காளி
2 பச்சை மிளகாய்
2 தேக்கரண்டி புளிச்சாறு
கறிவேப்பிலை சிறிதளவு
நறுக்கிய கொத்தமல்லி மிளகாய்
2 கடுகு கடுகு
2 வரமிளகாய்
1/4 தேக்கரண்டி பெருங்காயம்
1/2 தேக்கரண்டி வெல்லம்
1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
எண்ணெய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு

வறுத்து அரைக்க:
 
2 தேக்கரண்டி உளுந்து
2 தேக்கரண்டி சீரகம்
3 தேக்கரண்டி மல்லி
1/2 தேக்கரண்டி வெந்தயம்
4 வரமிளகாய்
1 கப் துருவிய தேங்காய்

செய்முறை

பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி பெருங்காயம், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வெங்காயம் சற்று நிறம் மாற வதக்கவும்.

காய்களை மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும் புளிகரைசலை சேர்த்து பச்சை வாசனை போகும்வரை மூடியிட்டு வைக்கவும்.

பின்னர் அரைத் தேங்காய் விழுது, வெல்லம், உப்பு, தண்ணீர் சேர்க்கவும்.

விழுது வெந்ததும் வேக வைத்த பருப்பை சேர்த்து 1 கொதிவிட்டு கடுகு கறிவேப்பிலை, தாளிக்கவும்.

வரமிளகாய் கொத்தமல்லி தூவி இட்லி, தோசை, சாதத்துடன் பரிமாறவும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE