தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி?

By தேஜஸ்

தேவையானவை:

2 கப் பாசுமதி அரிசி
2 கப் தேங்காய் பால்
1 வெங்காயம்
1 தக்காளி
5 பச்சை மிளகாய்
1 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
3 கிராம்பு
2 பிரிஞ்சி இலை
சோம்பு பூண்டு சிறிதளவு
1 தேக்கரண்டி கரம் மசாலா
கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை

முதலில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, சோம்பு, சீரகம் போடவும்

பின்னர் கறிவேப்பிலை சேர்த்து, அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயம், நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்னர் தக்காளி, கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

அதனுடன் 2 கப் தேங்காய் பால் சேர்த்து கலக்கவும். இப்போது ஒரு முறை கழுவிய பாசுமதி அரிசியை சேர்த்து அதனுடன் 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஒரு விசில் வரும் வரை வைத்து பின்னர் இறக்கி விடவும்.

சுவையான ஈசி தேங்காய் பால் சாதம் ரெடி.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE