இடியாப்பம் செய்வது எப்படி?

By தேஜஸ்

லெமன் இடியாப்பம்

தேவையானவை: இட்லி அரிசி - 250 கிராம், எலுமிச்சம்பழம் - ஒன்று, பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக் கொள்ளவும்.
வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு சேர்த்து, வெடித்ததும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து, பொட்டுக் கடலை, பெருங்காயத்தூள் சேர்த்து, எலுமிச்சைச் சாறு, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி... இதை இடியாப்பத்துடன் கலக்கவும்.

தேங்காய்ப்பால் இடியாப்பம்
தேவையானவை:

இட்லி அரிசி - 250 கிராம், தேங்காய்ப்பால் - 100 மில்லி, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பொடித்த வெல்லம் - ஒரு கப், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக் கொள்ளவும்.
தேங்காய்ப்பாலுடன் வெல்லம் சேர்த்து லேசாக சூடாக்கி, ஏலக்காய்த்துள் சேர்க்கவும். இதை இடியாப்பத்துடன் கலக்கவும்.

பருப்பு உசிலி இடியாப்பம்
தேவையானவை:
இட்லி அரிசி - 250 கிராம், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு கப், காய்ந்த மிளகாய் - 2, நல்லெண்ணெய் (பருப்பு உசிலிக்கு) - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக் கொள்ளவும்.

துவரம்பருப்பு, கடலைப்பருப்பை ஊற வைத்து தண்ணீர் வடிக்கட்டி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு பருப்பு விழுது சேர்த்து, உதிரி உதிரியாக வருமாறு மிதமான தீயில் வைத்துக் கிளறி, இடியாப்பத்துடன் கலக்கவும்.

உருளை மசாலா இடியாப்பம்.
தேவையானவை:
 இட்லி அரிசி - 250 கிராம், உருளைக்கிழங்கு - இரண்டு, கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் - 5 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக் கொள்ளவும்.

உருளைக்கிழங்கை பொடி யாக நறுக்கவும். வாணலியில் 4 டீஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி, உருளைக் கிழங்கை சேர்த்து உப்பு, மிள காய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கிளறி இறக்கவும். இடியாப்பத்துடன் உருளை மசாலாவை சேர்த்து நன்கு கலக்கவும்.

குறிப்பு:இடியாப்பம் செய்யும்போது... மாவு உருண்டை களை எடுத்த பிறகு, பாத்திரத் தில் இருக்கும் மாவு கலந்த நீருடன் உப்பு, மோர், நறுக்கிய சின்ன வெங்காயம் சிறிதளவு சேர்த்தால்... வெயிலுக்கு பதமான கஞ்சி தயார்.

பைனாப்பிள் இடியாப்பம்
தேவையானவை:
இட்லி அரிசி - 250 கிராம், பைனாப்பிள் - 10 ஸ்லைஸ், நெய்யில் வறுத்த முந்திரி - 10, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை: இடியாப்பத்தை பக்கம் 104-ல் இருக்கும் இனிப்பு இடியாப்பத்தில் சொல்லப்பட்டிருப்பது போல தயாரித்துக் கொள்ளவும்.

பைனாப்பிளை தோல் சீவி நறுக்கி, அரைத்து, இடியாப்பத்துடன் கலக்கவும். வறுத்த முந்திரி சேர்க்கவும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE