கொய்யாக்காய் கிரேவி செய்வது எப்படி?

By தேஜஸ்

தேவையானவை:

1 கொய்யாக்காய்
2 பெரிய வெங்காயம்
1 தக்காளி
2 ஸ்பூன் சீரகம்
1/4 டீஸ்பூன் கடுகு
1/2 ஸ்பூன் மிளகாய்த் தூள்
1 ஸ்பூன் கொத்தமல்லி தூள்
1 ஸ்பூன் கரம் மசாலா
கொத்தமல்லி கொத்தமல்லி ஸ்பூன் கசகசா
1/2 மூடி தேங்காய்
2 பச்சை மிளகாய்

செய்முறை

முதலில் கொய்யாவை கழுவி தோல் உரித்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பின் வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம், வெங்காயம், தக்காளி, கொய்யா, ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.

இவை நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து வதக்கி சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.   

தேங்காய்,பச்சை மிளகாய், கசகசா, மூன்றையும் ஒரு மிக்ஸியில் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.

பின் அரைத்ததை எடுத்து கொதிக்கும் குழம்பில் ஊற்றி பிறகு மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.   

அவ்வளவுதான் சுவையான கோவா கிரேவி தயார்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE