தேவையானவை:
சிக்கன் கால் கிலோ
இஞ்சி பூண்டு விழுது 1 டேபிள் ஸ்பூன்
சோளமாவு 100 கிராம்
மிளகாய் சாஸ் 2 டேபிள் ஸ்பூன்
முட்டை 1
மைதா மாவு 1 டீஸ்பூன்
எண்ணெய்தேவைக்கேற்ப
உப்பு தேவைக்கேற்ப
கிரேவி செய்வதற்கு :
பூண்டு பல் - 10
பெரிய வெங்காயம் - 2
குடைமிளகாய் - 2
சிக்கன் துண்டு - கால் கிலோ
கிராம்பு - 4
தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள் டீஸ்பூன்
மிளகாய் சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சைச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் சிக்கனில் எலும்புகளை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
பின்பு முட்டையை கலக்கி அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் சாஸ், உப்பு, சோள மாவு, மைதா மாவு அனைத்தையும் சேர்த்து மீண்டும் நன்கு கலக்கி, நறுக்கி வைத்துள்ள சிக்கனை அதில் பிரட்டி அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
பிறகு அவற்றை வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.
பிறகு பூண்டு, குடைமிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
வாணலியில் 3 டீஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு, குடைமிளகாய், வெங்காயத்தை போட்டு 2 அல்லது 3 நிமிடம் வதக்கி, அத்துடன் மிளகாய் சாஸ், தக்காளி சாஸ், சோயா சாஸ், எடுத்து வைத்துள்ள சிக்கன் துண்டு அனைத்தையும் போட்டு கிளறி கிரேவியாக எடுத்துக் கொள்ளவும்.
சோளமாவில் சிறிது தண்ணீர்வீட்டு கரைத்துக் கொண்டு செய்து வைத்த கிரேவியுடன் ஊற்றி, உப்பு சேர்த்து, பொரித்து வைத்துள்ள கோழிக்கறி மற்றும் கொத்தமல்லி தழையையும் அதில் போட்டு 2 அல்லது 3 நிமிடம் மூடிபோட்டு லேசான தீயில் வைக்கவும்.
பிறகு எலுமிச்சைச்சாறு சேர்த்து பிரட்டி விட்டு இறக்கவும்.