மட்டன் ஈரல் தொக்கு செய்வது எப்படி?

By தேஜஸ்

தேவையானவை:

மட்டன் ஈரல் துண்டுகள் - 500 கிராம்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
கறி மசாலா - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
பட்டை - ஒரு துண்டு
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 5 பல்
கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை
ஒரு கிண்ணத்தில், ஈரல், மஞ்சள் தூள், மிளகுத் தூள் சேர்த்து நன்றாக கிளறி சுமார் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், பட்டை, சோம்பு, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.

பிறகு, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

தற்போது, தக்காளி சேர்த்து வதக்கியதும், அதனுடன் ஈரல் சேர்த்து கிளறவும். பின்னர், மிளகாய்த் தூள், தனியாத் தூள், கறி மசாலா, உப்பு, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கிளறி வேக வைக்கவும்.

இறுதியாக, நறுக்கிய கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கினால், சுவையான மட்டன் ஈரல் வறுவல் ரெடி..!.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE