இறால் தொக்கு தோசை செய்வது எப்படி?

By தேஜஸ்

தேவையானவை:
தோசை மாவு  ஒரு கப்
இறால்  கால் கிலோ
சின்னவெங்காயம்  10
சீரகம்  கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள்  அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள்  சிறிதளவு
எண்ணெய்  2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை  சிறிதளவு
முட்டை  2
உப்பு  தேவையான அளவு

செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இத்துடன், தேவையானவற்றில் கொடுத்துள்ள முட்டை, தோசைமாவு நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து வதக்கவும்.

இறுதியில், முட்டையை உடைத்து ஊற்றி இறக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும், எண்ணெய் விட்டு், மெல்லிய தோசைகளாக வார்க்கவும். இதன் மீது  ஏற்கெனவே செய்து வைத்துள்ள மசாலாக் கலவையை வைத்து சுற்றிலும் எண்ணெய் விடவும்.  பிறகு, தோசையை அப்படியே சப்பாத்தி போல் சுருட்டி எடுத்துப் பரிமாறவும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE