சிக்கன் ரசம் செய்வது எப்படி?

By தேஜஸ்

தக்காளி ரசம், மிளகு ரசம், பைனாப்பிள் ரசம் என்றெல்லாம் ருசித்திருப்பீர்கள். சிக்கன் ரசம் செய்து பார்த்து சுவையில் மகிழ்ந்திருக்கிறீர்களா? அதுவொரு தனிச்சுவை. செய்து பார்த்து சுவைத்து அந்த அனுபவத்தையும் உங்கள் சுவைக் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாமே!

தேவையானவை
சிக்கன் – 1/2 கிலோ
வெங்காயம் – 200 கிராம் (விழுதாக்கவும்)
தக்காளி – 100 கிராம்(நறுக்கியது)
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 4 (கீறியது)
இஞ்சி,பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
புளி – கோலியளவு
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் – 1 டீஸ்பூன்
பட்டை, லவங்கம் – தலா 2
ஏலக்காய் – 2
உப்பு – தேவைக்கேற்ப
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:
சிக்கனை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக்கவும். ஒரு அகலமான கடாயில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். பிறகு கறிவேப்பிலை, மிளகாய், வெங்காய விழுது, நறுக்கிய தக்காளி ஆகியவற்றை சேர்த்து ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும்.

மிளகுத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து சிக்கனையும் வதக்கி வேகுமளவிற்கு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

சிக்கன்நன்கு வெந்ததும் புளியைக் கரைத்து ஊற்றி சிறிது நேரம் அடுப்பில் வைக்கவும். பின் அதை வடிகட்டி விடவும். பரிமாறும்போது சிக்கன் துண்டுகளை ரசத்தில் போட்டு பரிமாற வேண்டும். இப்போது மணக்கும் சிக்கன் ரசம் ரெடி. சாதத்தில் ஊற்றி சாப்பிட, சுவை நெஞ்சை அள்ளிக்கொண்டு போகும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE