கன்னு போட்ட நாலஞ்சு நாளுக்கு மாட்டுக்கு சுரக்கற பாலை வழக்கம் போல நாம உபயோகிக்க முடியாது. சீம்பால்னு சொல்ற அந்தப் பால் அவ்வளவு கெட்டியா புது வாசனையோட இருக்கும்.
கன்னுக் குட்டிக்கு சத்து கொடுக்கற அந்தப் பாலை திரட்டுப் பால் மாதிரி சுவையா செஞ்சு சாப்பிடறது ஊர் வழக்கம். செய்யறது ஈஸியா இருக்கும். ஆனா சுவை ஓஹோனு இருக்கும். செய்யறது எப்படினு சொல்றேன்.
சீம்பால் (மாடு கன்னு போட்ட ரெண்டாம், மூணாம் நாள் பால்) 2 கப் அளவுக்கு எடுத்து அதுல 1 கப் சர்க்கரை, பொடியா நறுக்கின முந்திரி துருவல் ரெண்டு டேபிள் ஸ்பூன், ஏலத் தூள் 1 டீஸ்பூன்.. எல்லாத்தையும் சேர்த்துக் கலக்குங்க.
இட்லிப் பானைல தண்ணி ஊத்தி, அதுல பால் கலவை உள்ள பாத்திரத்தை வெச்சு, சன்னமான தீயில அரை மணி நேரம் வேக வைங்க. அப்புறமா கலவைல ஒரு கத்திய சொருகிப் பாருங்க. கத்தில பால் ஒட்டலேனா கலவை வெந்துடுச்சுனு அர்த்தம். அப்போ பாத்திரத்தை இறக்கிடுங்க.
கலவை ஆறினதும் ஒரு தட்டுல கவிழ்த்து சின்னச்சின்ன துண்டுகளா வெட்டி பரிமாறுங்க. எல்லாரும் போட்டி போட்டு வாங்கி சாப்பிடுவாங்க.
ஏலத்தூள் வாசனை பிடிக்காதவங்க வெனிலா எசன்ஸ் சேர்த்துக்கலாம். கலர்ப் பொடிங்க கலந்து வேகவெச்சுக் கொடுத்தா பிள்ளைங்க குஷியாயிடுவாங்க.