குஷ்பூ இட்லி செய்வது எப்படி?

By சரவணன்

தேவையானவை:

புழுங்கல் அரிசி - 2 டம்ளர்
பச்சரிசி - 2 டம்ளர்
உளுத்தம் பருப்பு - 1 டம்ளர்
சின்ன ஜவ்வரிசி - 1 டம்ளர்
வெந்தயம் - 2 தேக்கரண்டி
கொட்டை முத்து - 5 (ஆமணக்கு விதை)
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

புழுங்கல் அரிசி, பச்சரிசியை ஒன்றாகவும், உளுத்தம் பருப்பு, சின்ன ஜவ்வரிசி, வெந்தயம் ஒன்றாகவும் 5 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு ஊற வைத்த உளுத்தம் பருப்பு, சின்ன ஜவ்வரிசி, கொட்டைமுத்து, வெந்தயத்தை கிரைண்டரில் போட்டு கெட்டியாக அரைக்கவும்.

அரைத்து எடுத்த பின் ஊற வைத்த புழுங்கல் அரிசி, பச்சரிசியை போட்டு நைசாக (வெண்ணெய் பதத்தில்) அரைக்கவும்.

உப்பு சேர்த்து கரைத்து 8 மணி நேரம் புளிக்க விடவும். புளித்த பின் இட்லியாக ஊற்றவும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE