ஆட்டுக் குடல் குழம்பு செய்வது எப்படி? (வயிற்றுப்புண் சரியாக உதவும் )

By செய்திப்பிரிவு

தேவையானவை:

சுத்தம் செய்த குடல் - 1
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 4 பல்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
தேங்காய்துருவல் - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 150 கிராம்
தக்காளி - 200 கிராம்
மிளகாய் தூள் - 3/4 தேக்கரண்டி
தனியா தூள் - 1/2 தேக்கரண்டி
சோம்பு, சீரக தூள் - 1தேக்கரண்டி
பட்டை - 2 துண்டு
லவங்கம் - 2
ஏலம் - 1
சோம்பு - சிறிதளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு

முதலில் வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குடலை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும். (சுடுதண்ணீரில் கழுவி )

முதலில் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், தேங்காய் இவற்றை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளித்த பின் அரிந்த பெரிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும். அடுத்து தக்காளியை சேர்த்து வதக்கவும்,

தக்காளி நன்கு வதங்கியவுடன் மிளகாய், தனியா, சோம்பு, சீரக பொடி, உப்பு சேர்த்து 2 நிமிடம் நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் சுத்தம் செய்த குடலையும் அதனுடன் சேர்த்து குக்கரை மூடி 10  விசில் விட்டு இறக்க வேண்டும்.

விசில் விட்டு குக்கரில் மூடியை திறந்து அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான மட்டன் குடல் குழம்பு ரெடி.

(தண்ணீர் அதிகமாக சேர்க்க கூடாது, ஏனெனில் குடல் தண்ணீர் விட்டு வேகும்.)

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE