முட்டை பணியாரம் செய்வது எப்படி?

By செய்திப்பிரிவு

தேவையான பொருள்கள்
இட்லி மாவு - ஒரு கப்
முட்டை - 2
சின்ன வெங்காயம் - 6
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
கடுகு - கால் தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை

தேவையானப் பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். பச்சைமிளகாய், கறிவேப்பிலை இரண்டையும் பொடியாக நறுக்கவும்.

முட்டையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு அடித்துக் கலக்கவும்.
இட்லி மாவுடன் அடித்து வைத்திருக்கும் முட்டையை ஊற்றவும்.
பிறகு அதனுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.

வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும், வெங்காயம் வதங்கியதும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி எடுத்து வைக்கவும்.

முட்டை ஊற்றி கலந்த இட்லிமாவு கலவையுடன் தாளித்த பொருட்களை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.

குழிப்பணியாரக்கல்லில் ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டியில் மாவை எடுத்து பணியாரக்கல்லில் முக்கால்பாகம் அளவிற்கு ஊற்றவும்.

பணியாரம் ஒருபக்கம் வெந்ததும் திருப்பிப் போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
முட்டைப் பணியாரம் தயார்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE