கத்திரிக்காய் பிரியாணி செய்வது எப்படி?

By செய்திப்பிரிவு

தேவையான பொருட்கள் :

 

பொருள் - அளவு

அரிசி3 கப்

கத்திரிக்காய்அரை கிலோ

பெரிய வெங்காயம் 7

தக்காளி5

பச்சை மிளகாய்5

தயிர்அரை கப்

இஞ்சி பூண்டு விழுது2 டீஸ்பூன்

சோம்பு1 டீஸ்பூன்

பட்டை, கிராம்பு3 (ஒவ்வொன்றிலும்)

மஞ்சள் தூள்1 டீஸ்பூன்

மிளகாய்த்தூள்அரை டேபிள் ஸ்பூன்

கடலைப்பருப்பு2 டீஸ்பூன்

எண்ணெய்தேவைக்கேற்ப

நெய்1 டீஸ்பூன்

கறிவேப்பிலை ஒரு கொத்து

உப்புதேவைக்கேற்ப

ஏலக்காய்3

தாளிக்க :

கடுகு - 1 டீஸ்பூன்

பெருங்காயம் - 2 சிட்டிகை

எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை :

 

  அரிசியை சிறிது நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும். 

 

  குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கறிவேப்பிலை, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.

 

  பிறகு தக்காளியையும் சேர்த்து வதக்கி அதனுடன் கத்திரிக்காய் போட்டு நன்கு வதக்கவும். 

 

  கத்திரிக்காய் வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கியவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் தயிர் ஊற்றி வதக்கி அரிசியையும் போட்டு நன்கு கிளறவும்.

 

  4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும், நெய் ஊற்றி கொத்தமல்லி தூவி குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் சிம்மில் வைத்து 5 நிமிடங்கள் கழித்து இறக்கவும். சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து முந்திரி, கடலைப்பருப்பு (வறுத்ததை) போட்டு சாதம் உடையாமல் கிளறி பரிமாறலாம்.

 

மணமணக்கும் கத்திரிக்காய் பிரியாணி ரெடி!.

 

புதுவிதமான பிரியாணியை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE