வெண்டைக்காய் புளி குழம்பு செய்வது எப்படி?

By செய்திப்பிரிவு

தேவையான பொருட்கள்
வெண்டைக்காய் 1/4 கிலோ
வெங்காயம் 1
தக்காளி 1
பச்சைமிளகாய் 2
கறிவேப்பிலை சிறிது
பூண்டு 5 பற்கள்
சாம்பார்தூள் 11/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
புளிகரைசல் 1/4கப்
தாளிக்க
எண்ணை 2 ஸ்பூன்
கடுகு 1/4 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு 1/2 ஸ்பூன்
வெந்தயம் 1/4 ஸ்பூன்
சோம்பு 1/4 ஸ்பூன்

செய்முறை
வெண்டைக்காயை கழுவி வட்டமாக நறுக்கிவைக்கவும்.

வெங்காயம்,தக்காளி, மிளகாய் நறுக்கிவைக்கவும். பூண்டு தோலுரித்து வைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணை ஊற்றி தாளிக்ககொடுத்தவற்றை போட்டு தாளித்து வெங்காயம், மிளகாய்,கறி வேப்பிலை,பூண்டு போட்டு வதக்கவும்.

தக்காளி போட்டு நன்கு வதக்கவும்.வெண்டைக்காய் போட்டு வதக்கவும்.

காய் நன்கு வதங்கியவுடன் மஞ்சள்தூள்,சாம்பார்தூள் போட்டு வதக்கி புளிகரைசல் ஊற்றி தேவையான தண்ணீர், உப்பு போட்டு கலக்கி மூடிபோட்டு வேகவிடவும்.

காய் வெந்து குழம்பு சிறிது கெட்டியானவுடன் உப்பு பார்த்து இறக்கவும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE