இட்லி பொடி செய்வது எப்படி?

By தேஜஸ்

1. பூண்டு மிளகாய் பொடி:

நன்றாகக் காய்ந்த மொருமொருப்பான பட்ட மிளகாய் - 50 gm. ஓரு வாணலியில் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். காய்ந்த கொத்தமல்லி விதைகள் - 150 gm. வறுத்து, பிறகு உப்பு, பெருங்காயம் போட்டு வறுத்து ஆற வைக்கவும்.

பூண்டு 100 gm. தோலுடன் வறுத்து ஆறியதும் முறத்தில் போட்டு புடைத்தால் தோல் கழண்டு வந்து விடும். இதை தனியே வேறு ஒரு தட்டில் போட்டு ஆறவிட வேண்டும்.

மேலே சொன்ன மிளகாயை முதலில் மிக்சியில் கொரகொரப்பாக அரைத்து, பின் மல்லி,உப்பு, பெருங்காயம் போட்டு அதனுடன் சேர்த்து நன்றாக powder போல் அரைத்து அதன் பின் பூண்டுப் பற்களைப் போட்டு அரைக்கும்போதே வாசம் சும்மா சொல்லவில்லை.. அப்படி இருக்கும்..!
இதை இட்லி, தோசைக்கு நல்லெண்ணெய் ஊற்றியும், பழைய சாதம், தயிர் சாதம் போன்றவற்றிற்கு எண்ணெய் ஊற்றாமலும் தொட்டு சாப்பிட்டால் ஆஹா..!

2. சாதாரண இட்லி பொடி :

ஒரு வாணலியில் கொஞ்சமாக எண்ணெய் விட்டு பட்ட மிளகாய் - gm., மல்லி - 10 gm., கடலைப் பருப்பு - 100 gm.,கருப்பு உளுத்தம் பருப்பு - 200 gm. புழுங்கல் அரிசி 2 டீஸ்பூன், பெருங்காயம் - 10 gm., எள் - 1/4 டீஸ்பூன், உப்பு, தேவையெனில் கொஞ்சம் கருவேப்பிலை போட்டு தனித்தனியாக வறுத்து நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து இறுதியில் 5 பூண்டுப் பற்களை பச்சையாக போட்டு அதையும் அரைத்து ஆறியதும் ஒரு bottle - ல் போட்டு காற்றுப் புகாதவண்ணம் மூடி வைக்கவும்.

இதனையும் நல்லெண்ணெய் போட்டு இட்லி மற்றும் தோசைக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் ஓஹோ.. இதுவல்லவோ.. சொரக்கம் என்ற வகையில் இருக்கும்.. இதனையும் பழைய சாதத்துக்கு தொட்டு சாப்பிடலாம்..

முக்கியக் குறிப்பு :- கடலை பருப்பை விட கருப்பு உளுத்தம் பருப்பு சற்று கூடுதலாக போட்டால் பொடி super - ஆக இருக்கும்..

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE