மேக்ரோன் (French Macaron) செய்வது எப்படி?

By தேஜஸ்

வனிலா மேக்ரோன்

தேவையான பொருட்கள்
பாதாம் மாவு (Almond flour) – 1 கப்
ஐசிங் சர்க்கரை – 1 கப்
முட்டை வெள்ளை – 2
சாதாரண சர்க்கரை – 3 டேபிள்ஸ்பூன்
வனிலா எசன்ஸ் – ½ டீஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
பில்லிங் (Cream Filling)
பட்டர் – ¼ கப்
ஐசிங் சர்க்கரை – ½ கப்
வனிலா எசன்ஸ் – ½ டீஸ்பூன்
செய்வது எப்படி

1. பாதாம் மாவு, ஐசிங் சர்க்கரை இரண்டையும் சலித்து ஒன்றாக கலக்கவும்.
2. முட்டை வெள்ளையை ஒரு பாத்திரத்தில் எடுத்து உப்பு சேர்த்து நன்றாக அடிக்கவும்.
3. அடிக்கும்போது சாதாரண சர்க்கரையை சிறிது சிறிதாக சேர்த்து ஸ்டிஃப் ஃபோம் வரும் வரை அடிக்கவும்.
4. வனிலா எசன்ஸ் சேர்க்கவும்.
5. இப்போது பாதாம்–சர்க்கரை கலவையை 2–3 தடவையாக சேர்த்து மெதுவாக கலக்கவும்.
6. பைப்பிங் பேக்கில் நிரப்பி பேக்கிங் பேப்பர் போட்ட ட்ரேயில் வட்டமாக பிழியவும்.
7. 15–20 நிமிடம் வெளியே வைத்து மேல் லேசாக உலர விடவும்.
8. 150°C ஓவனில் 12–15 நிமிடம் பேக் செய்யவும்.
9. குளிர்ந்ததும் இரண்டு மேக்ரோன் இடையில் க்ரீம் வைத்து ஒட்டவும்.

சாக்லேட் மேக்ரோன்

தேவையான பொருட்கள்
பாதாம் மாவு – 1 கப்
ஐசிங் சர்க்கரை – 1 கப்
கோகோ பவுடர் – 2 டேபிள்ஸ்பூன்
முட்டை வெள்ளை – 2
சாதாரண சர்க்கரை – 3 டேபிள்ஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
சாக்லேட் கானாஷ் பில்லிங்
டார்க் சாக்லேட் – ½ கப்
ஃப்ரெஷ் கிரீம் – ¼ கப்
செய்வது எப்படி

1. பாதாம் மாவு, ஐசிங் சர்க்கரை, கோகோ பவுடர் மூன்றையும் சலிக்கவும்.
2. முட்டை வெள்ளையை உப்புடன் அடித்து, சர்க்கரை சேர்த்து ஸ்டிஃப் ஆகும் வரை அடிக்கவும்.
3. உலர் கலவையை மெதுவாக சேர்த்து மடித்து கலக்கவும்.
4. ட்ரேயில் வட்டமாக பைப்பிங் செய்யவும்.
5. 15–20 நிமிடம் உலர விடவும்.
6. 150°C ஓவனில் 12–15 நிமிடம் பேக் செய்யவும்.
7. கிரீம் சூடாக்கி சாக்லேட்டில் ஊற்றி கானாஷ் தயாரிக்கவும்.
8. மேக்ரோன் குளிர்ந்ததும் கானாஷ் வைத்து ஒட்டவும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE