மலையாள திரை உலகின் முதல் கதாநாயகி ராஜம்மா என்கிற PK ரோஸி

By News Room

ஜே சி டானியல் எனும் எல்லைத் தமிழர் இயக்கி நடித்த மலையாளத்தின் முதல் திரைப்படமான விகதகுமாரனில், பெண்கள் யாரும் நடிக்க முன்வராத நிலையில் தலித் கிறிஸ்துவரான ரோஸி 1928-ல் துணிச்சலாக கதையின் நாயகியான நாயர் பெண் கதாபாத்திரத்தில் நடித்தார். 

அந்தக் காரணத்தினாலேயே  படம் வெளியான திருவனந்தபுரம் காபிடல் திரையரங்கில் வைத்து நாயர் குண்டர்களால் அவர்  தாக்கி விரட்டியடிக்கப்பட்டார். அவர் குடிசை கொளுத்தப்பட்டது. அவர் தப்பி வந்து தமிழ் நாட்டில் நாகர்கோவில் அருகே கிராமம் ஒன்றில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். பின்னர் 1988-ல் அவர் மறைந்து விட்டதாக செய்திகள் சொல்கின்றன.

தெய்வத்தின் சொந்த நாட்டில் நடந்த கொடூரம் இது. 

தற்போது மலையாள சினிமாவில் PK ரோஸி பெயரில் விருதளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரது 120ம் பிறந்த நாளான இன்று Google toodle வெளியிட்டு கெளரவப்படுத்தியுள்ளது.

.
மேலும்