ஒழுக்கத்தை காட்டிய பழைய சினிமாக்கள்!

By News Room

60 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த நம் தமிழகத்து மக்களுக்கு படிப்பறிவு இல்லாவிட்டாலும், ஒழுக்கத்தோடும் அரசின் விதிமுறைகளையும் பின்பற்றியே வாழ்ந்துள்ளனர் என்பதை, இரண்டு பழைய திரைப்படங்கள் கண்ணாடி போல் நமக்கு தெள்ளத் தெளிவாக காட்டுகிறது.

படம்:டவுன்பஸ்.வெளியான ஆண்டு 1955.Heroine அஞ்சலிதேவி.இந்தப் படத்தை இப்பொழுது பார்த்தாலும் ரொம்ப நல்லாத்தான் இருக்கு.காட்சிகளில் தொய்வே இல்லாமல் எந்தக்காலத்திலும் பார்க்கும்படியா அவ்வளவு freshness-ஆ படம் பண்ணியிருக்காங்க.

1970-க்குப் பிறகு வந்த பெரும்பாலான  தமிழ்ப்படங்கள் படு மட்டரகம்தான்.பாரதிராஜா,மகேந்திரன்,பாலுமகேந்திரா வந்தப் பிறகுதான் தமிழ்சினிமாவில் ரசனை கொஞ்சம் மேம்பட ஆரம்பிச்சது.

இப்போ சொல்ல வந்த தலைப்புக்கு வர்றேன்.

டவுன்பஸ் திரைப்படக்காட்சிப்படி, டவுன்பஸ் ஒரு பேருந்து நிறுத்தத்தில் வந்து நிற்கும்.மக்கள் அனைவரும் வரிசையில் நிற்பார்கள்.ஒருவர் பின் ஒருவராக ஏறுவார்கள்.சிலர் ஏறியபிறகு நடத்துனுர்,வண்டியில் சீட் இல்லையென்று மற்றவர்களை ஏறவிடமாட்டார்.அப்பொழுதெல்லாம் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதியில்லை என்று நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

இதுலே பெரிய விஷயம் என்னன்னா அந்த டவுன் பஸ்ஸீக்கு கண்டக்டரே பெண்தான்.அதாவது படத்தோட Heroine அஞ்சலிதேவி.ஆண்கள் வேலை செய்யும் இடத்தில் இரண்டே பெண்கள் வேலை செய்தால் பிரச்னை வரச்னை வரத்தானே செய்யும்.அதை அவர்கள் எப்படி சமாளித்து வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் படத்தின் மையம்.

'சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா
எனை விட்டுப்பிரிந்து போன கணவன் வீடு திரும்பலே',
    -எனும் மிகப்பிரபலமான பாடலும் இப்படத்தில்தான்.

இன்னொரு படத்தையும் பார்த்து விடுவோம்.படத்தின் பெயர் தொழிலாளி.1964-ஆம் ஆண்டு வந்த திரைப்படம்.பஸ் கண்டக்டராக எம்ஜிஆர் நடித்திருப்பார்.

Heroism என்றாலே அது எம்ஜிஆர் படம்தான்.ஒரு காட்சியில் எம்ஜிஆரின் அம்மா S.N.லட்சுமியம்மாளை பஸ் ஏறுவதற்கு அனுமதிக்க மாட்டார்.காரணம்,பஸ்ஸில் சீட் full என்பதால். எம்ஜிஆர் அப்படியொரு Sincerity.எம்ஜிஆர் நடித்த இந்த மாதிரியான காட்சியெல்லாம் பார்த்துதான் மக்கள் அவர் மீது பொத்பொத்தெனு விழுந்துட்டாங்கன்னு நினைக்கறேன்.

1955-70 வரை படிப்பறிவு மக்கள் குறைந்த சதவீதம்தான்.ஆனால்,ஒழுக்கத்தோடு வாழ்ந்துள்ளார்கள்.இன்றைக்கு படிப்பறிவு இருக்கு, ஒழுக்கம்தான்  இல்லை.

அவ்வப்பொழுது பழைய திரைப்படங்களையும் பார்த்தால்தான், இது போன்ற விஷயங்களையும் நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

சே மணிசேகரன்

.
மேலும்