நோரா மூவி விமர்சனம்

By News Room

அந்தப் பேராசிரியருக்கு வயது அறுபதை தாண்டிவிட்டது.மனைவியுடன் வசித்துவருகின்றார்.ஒரு நாள் அவரின் அன்புக்குரிய நோரா காணாமல் போய்விடுகிறாள் .நோராவின் பிரிவு பேராசிரியரை நிலைகுலைய செய்கிறது .அவரின் முன்னாள் மாணவர்களுடன் சேர்ந்து நோராவை தேடுகிறார்.செய்தித்தாளில் நோராவை கண்டுபிடித்து தரும்படி விளம்பரம் தருகிறார் .ஆனால் கடைசி வரைக்கும் நோரா திரும்பி வரவேயில்லை...நோராவை கண்டுபிடிக்கவும் முடியவில்லை .நோராவின் பிரிவால் பேராசிரியரின் இதயத்தில் ஏற்பட்ட வடுவை குணப்படுத்த ஒரே ஒரு மருந்து தான் இருக்கிறது .அது நோராவுடன் அவர் மறுபடியும் சேர்கின்ற தருணம் தான் .

நோரா என்பது வேறுயாருமில்லை .பேராசிரியர் அதீத நேசத்துடன் வளர்த்துவந்த பூனையின் பெயர் தான் நோரா .இந்த நிகழ்வே பேராசிரியரின் இனிமையான இயல்பை சொல்லியிருக்கும் .

முதுமையில் இன்னொரு குழந்தைப்பருவத்தையும் மரணத்தையும் நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் பேராசிரியருக்கும் ,அவரிடம் பாடம் பயின்ற மாணவர்களுக்கும் இடையேயான இனிமையான உறவினூடாக வாழ்வின் உன்னதத்தை  நன்றியுணர்வை  ,துயரை அழகாக சித்தரிக்கிறது அகிராவின் இறுதிப்படைப்பான மததாயோ.

ஆசிரியர் ,மாணவர்களுக்கு இடையேயான உறவை சித்தரித்த படங்களில் முதன்மையானது

.
மேலும்