உயர்ந்த மனிதன் (1968) படத்தை பற்றிய தகவல்

By News Room

சிவாஜியும், அசோகனும், பேசிக் கொள்வதில்லை என்ற நிலை இருந்தாலும் இருவரும் இணைந்து நடிக்க வேண்டிய காட்சியில், முழு கவனத்துடன்  நடித்தனர். சிவாஜியின் நண்பராக டாக்டர் வேடத்தில் நடிக்கும் அசோகன், படத்தின் கடைசி காட்சியில், சிவாஜியின் வாழ்க்கையில் உள்ள முக்கிய ரகசியங்களை சொல்லி விட்டு, 'ஹார்ட் அட்டாக்' கில் இறந்து விடுவார். 

அந்தக் காட்சி படமாக்கப்பட்ட போது, அவ்வளவு திருப்தியாக அந்த காட்சி அமையவில்லை. சிவாஜி படத்தின் இரட்டை இயக்குனர்களான கிருஷ்ணன் - பஞ்சுவிடம், 'உங்களுக்கும், அசோகனுக்கும் ஆட்சேபனை இல்லை என்றால், நான் இந்த காட்சியில், நடித்துக் காட்டலாமா...' என்று கேட்டார். இயக்குனர்கள் மகிழ்ச்சியோடு சம்மதித்தனர். அந்த டாக்டர் பாத்திரம் எப்படி நடிக்க வேண்டும் என்பதை, முழுமையாக நடித்துக் காட்டினார் சிவாஜி. செட்டில் இருந்த அசோகன் மற்றும் இயக்குனர்கள் உட்பட அனைவரும் பிரமித்து போயினர். 

சிவாஜி செய்து 
காண்பித்தவாறே அசோகன், அந்த காட்சியில் நடித்தார். அது, அவருக்கு ஏராளமான பாராட்டுகளை பெற்றுக் கொடுத்தது, என்று, திரைப்பட தயாரிப்பாளரும் ஸ்டுடியோ அதிபருமான ஏ.வி.எம். சரவணன் எ.யு.ஏ.ஏ., சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். 

ஆகையால், அவர் நடித்த படத்தின் டைட்டிலே, அவருக்கு பொருந்தும்..    அவர் ஒரு சரித்திரம்.

.
மேலும்