HBD அன்புள்ள ரஜினிகாந்த்

By News Room

டிசம்பர் 12, 1949ல்  கர்நாடக மாநிலம், 

ராமோசி ராவ் காயக்வடுக்கும், ரமாபாயிக்கும் நான்காவது மகனாக ஒரு “மராத்தி” குடும்பத்தில் பிறந்தார்.

1977 ஆம் ஆண்டு  ‘புவனா ஒரு கேள்விக்குறி’ படம் ரஜினிகாந்த் அவர்களுக்கு  திருப்பத்தை தந்தது.

‘முள்ளும் மலரும்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’  படங்களில்  நடித்து மிகப்பெரிய வெற்றியை  பெற்றார்.

‘பில்லா’, ‘போக்கிரிராஜா’, ‘தனிக்காட்டு ராஜா’, ‘முரட்டுக்காளை’, போன்ற திரைப்படங்களில் ஒரு அதிரடி நாயகனாக நடித்தார். 1981ல்  கே.பாலச்சந்தர் இயக்கத்தில்  “தில்லு முல்லு” திரைப்படத்தின் மூலம், தன்னை  நகைச்சுவை நடிகராக வெளிப்படுத்தி இருப்பார்.

 ‘வேலைக்காரன்’, ‘பணக்காரன்’, ‘மிஸ்டர் பாரத்’, ‘தர்மத்தின் தலைவன்’, ‘எங்கேயோ கேட்டக் குரல்’, ‘மூன்று முகம்’, ‘நல்லவனுக்கு நல்லவன்’ மற்றும் ‘நான் சிவப்பு மனிதன்’ போன்ற திரைப்படங்கள்   பல வெற்றிகளை பெற்றுத்தந்தது.

 1985 ல்  எஸ்.பி முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த அவருடைய 100 வது படமான “ஸ்ரீராகவேந்திரா” திரைப்படம்  வித்தியாசமான நடிப்பு அனுபவத்தைப் தந்தது. 

‘படிக்காதவன்’, ‘மாவீரன்’, ‘ஊர்காவலன்’, ‘மனிதன்’, ‘குரு சிஷ்யன்’, ‘தர்மத்தின் தலைவன்’, ‘ராஜாதி ராஜா’, ‘ராஜா சின்ன ரோஜா’, மற்றும் ‘மாப்பிள்ளை’  திரைப்படங்கள் வெற்றியை தந்தது.

1990ல்   நடித்த ‘பணக்காரன்’, ‘அதிசயப்பிறவி’, ‘தர்மதுரை’, ‘தளபதி’, ‘மன்னன்’, ‘அண்ணாமலை’, ‘பாண்டியன்’, ‘எஜமான்’, ‘உழைப்பாளி’, ‘வீரா’, ‘பாட்ஷா’, ‘முத்து’, ‘அருணாசலம்’, ‘படையப்பா போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி.

.1995 ல்  வெளிவந்த “முத்து” திரைப்படம்,  வெளிநாட்டிலும் முத்திரை பதித்தது.  ஜப்பானிய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, வெற்றியை பெற்றது.

 2002ல்  சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில்  வெளிவந்த “பாபா” திரைப்படம்  வெற்றியை தரவில்லை. 

2005ல் பி.வாசு இயக்கத்தில்  “சந்திரமுகி”,  2007ல்  ஷங்கர் இயக்கத்தில்  “சிவாஜி”  நல்ல வசூலை தந்தது.  2010ல் ஷங்கருடன்  “எந்திரன்’ திரைப்படம், தமிழ் சினிமா வரலாற்றில் புதிய திருப்பத்தை தந்தது.

.
மேலும்