Glory மூவி விமர்சனம்

By News Room

பல்கேரிய படம். திருவனந்தபுரம் திரைப்படவிழா-2016ல் திரையிடப்பட்டது.
ஒரு சாதாரண மனிதனின் அவஸ்தைகளை எப்போதும் அதிகார வர்க்கம் கேலியாக பார்ப்பதுடன், அதை கண்டுகொள்வதே இல்லை. அது போன்ற ஒரு கதைதான் இது.
நாயகன் காலையில் எழுந்ததும் அவன் தந்தை அவனுக்கு அளித்த glory என்ற கைக்கடியாரத்தை எடுத்து சரியான நேரம் வைத்துக் கொண்டு வேலைக்கு புறப்படுகிறான். அவனுக்கு ரயில்வே துறையில் லைன்மேன் வேலை. 
ரயில்வே டிராக்கில் ஒவ்வொரு இணைப்பையும் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டே செல்லும் அவனுக்கு திடீரென்று ஒரு ரூபாய் நோட்டு கிடைக்கிறது. சுற்றுமுற்றும் பார்க்கிறான். பிறகு அதை எடுத்து பைக்குள் போட்டுக் கொள்கிறான். பிறகு சிறிது தூரம் சென்றதும், மீண்டும் ஒரு ரூபாய் நோட்டு கிடைக்கிறது, அது முந்தைய நோட்டை விட மதிப்பில் பெரியது. கொஞ்சம் யோசிக்கிறான். மீண்டும் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு அதையும் எடுத்து பாக்கெட்டுக்குள் திணிக்கிறான். 
பிறகு, அப்படியே கொஞ்ச தூரம் நடக்கிறான். அதிச்சியில் உறைகிறான்.... அவன் முன்னே கரன்சி குவியல் கொட்டிக் கிடக்கிறது! அப்படியே டிராக்கில் உட்கார்ந்து விடுகிறான். தொப்பியை கழட்டுகிறான். 
அடுத்த காட்சி.... டிரான்ஸ்போர்ட் மினிஸ்ட்ரியிலிருந்து ஆட்கள், போலீஸ், பத்திரிகை என ஆட்கள் குவிந்து விட்டனர். இவன் தெரிவித்த தகவலின் பேரிலேயே அவர்கள் அங்கு வந்திருந்தனர். 
பிறகு இவனது நேர்மையை பாராட்டும் வகையிலும், அரசங்கத்தில் நடைபெறும் ஊழலை மறைக்கவும் நேர்மைக்கான பரிசாக ஒரு வாட்ச் அவனுக்கு அளிக்கப்படுகிறது... விழாவில் அந்த வாட்சை மந்திரி அவனுக்கு அணிவிக்கிறார். அதற்காக அவனது தந்தை அவனுக்கு அளித்த Glory  கைக்கடியாரத்தை அவனது கையிலிருந்து கழட்டி ஒரு அதிகாரி கொண்டு போய்விடுகிறார். விழா முடிந்ததும் தருவதாகச் சொல்லி....
விழாவில் அவனுக்கு மந்திரி பக்கத்தில் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி ரயில்வேயில் நடக்கும் மிகப்பெரிய ஊழலைப் பற்றியும் அதிகாரிகள் அதற்கு உறுதுணையாக இருப்பதையும் மந்திரியிடம் சொல்ல முற்படுகிறான்.. ஆனால் மந்திரி அதைக் கண்டுகொள்ளவேயில்லை.
பிறகு, அவனது glory கைக்கடியாரத்தை மீண்டும் பெற அவன் செய்யும் முயற்சிகளும்... அதனால் அவனுக்கு ஏற்படும் சோதனைகளுமே படம். 
ஊழல் மண்டிக் கிடக்கும் அரசாங்கத்தை நையாண்டியோடு விமர்சிக்கிறார் இயக்குநர்.

.
மேலும்