திருச்சி வெக்காளி அம்மனும் நானும் - மனோபாலா!

By News Room

நான் தமிழ்த் திரைப்பட இயக்குனரும் நடிகரும் தயாரிப்பாளரும் ஆவாது காரணம் கலைமணி அவர்களும் கமல்ஹாசன் அவர்களும் தான் காரணம். 

கமலை பற்றி பேச ஆரம்பித்தால் ஒரு குழந்தையாகவே மாறிவிடுகிறார் மனோபாலா. பேசிக்கொண்டிருக்கும்போதே தனக்கு வாழ்க்கை கொடுத்தவரே கமல்தான் என்றும் நெகிழ்கிறார்.

"அவர்தான் என் கேரியருக்கே அஸ்திவாரம் போட்டது. பாரதிராஜாவிடம் என்னை கூட்டிப்போய் அசிஸ்டெண்டாக சேர்த்துவிட்டதே கமல் தான்

நான், சந்தானபாரதி, பிசி ஸ்ரீராம், மணிரத்னம், வாசு, ராபர்ட் ராஜசேகர் எல்லோரும் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த கடுமையான காலகட்டம் அது. எங்களை ஆழ்வார்பேட்டை கும்பல் என்றுதான் அழைப்பார்கள். அப்போது கமல் வீடு தான் எங்களுக்கு சரணாலயம் மாதிரி. முக்கியமாக நானும், சந்தானபாரதியும் அவர் வீட்டிலேயே தான் வள்ர்ந்தோம்.

அப்ப அவர் வளர்ந்துகிட்டு இருக்கற ஒரு ஹீரோ. எங்களோட கஷ்டங்களை நல்லா புரிஞ்சு வெச்சுகிட்டு எங்களை பார்த்துகிட்டவர் அவர். தீபாவளி, பொங்கல்னா அவர்தான் எங்களுக்கு ட்ரெஸ் எடுத்துக் கொடுப்பார். அப்படி கொடுக்கும்போது ட்ரெஸ்க்குள்ள பணம் இருக்கும்.

சிகப்பு ரோஜாக்கள் ஷூட்டிங் முடியும் கட்டத்தில் என்னை பாரதிராஜாவிடம் அழைத்து சென்று நீ இவரிடம் சேர்ந்தால் பெரிய ஆளாகிவிடலாம் என்று சொன்னதோடு பாரதிராஜாவிடம் சேர்த்துவிட்டதும் அவர்தான்.

நான் 1970 ஆண்டு முதல் திரையுலகில்
வந்தாலும் என்னுடைய வாழ்க்கையில்
துன்பங்களை தான் அனுபவித்து வந்தேன். 

எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். அதுவும் திருச்சி வெக்காளியம்மன் மீது நம்பிக்கை அதிகம். ஒருமுறை கையில் காசே இல்லை. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வேறு. இங்கிருந்து புறப்பட்டு பஸ்சில் திருச்சி சென்றேன். வெக்காளியம்மன் கோயிலுக்குப் போனேன். ஒரு பேப்பரில் சொந்த அம்மாவுக்கு எப்படி எழுதுவுமோ அப்படி என் மனதில் இருந்ததை எழுதினேன். அதை சூலத்தில் கட்டிவிட்டு திரும்பினேன். அப்படிக் கட்டினால் 7 நாட்களுக்குள் வேண்டியது நடக்கும் என்பார்கள். 

நானும் அப்படிச்செய்துவிட்டு சென்னைக்கு வந்தேன். வந்து இறங்கியபோது கையில் 1.20 பைசா இருந்துச்சு. நேர ஒரு ஹோட்டலுக்குப் போனேன், ஒரு ரூபாய்க்கு ஒரு தோசை வாங்கினேன். அதில் நிறைய சாம்பார் ஊற்றி சாப்பிட்டேன். அப்போது அங்கு ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து டைரக்டரே என்றொரு குரல். கண்ணீர் மல்க நிமிர்ந்து பார்த்தேன். கலைமணி சார் நின்றிருந்தார். நீங்கள் தான் எனது அடுத்தபடமான படத்தை இயக்குகிறீர்கள் என்று கூறிவிட்டு கையில் ரூ.50 அட்வான்ஸ் கொடுத்துவிட்டுச் சென்றார். அந்த 50 ரூபாய் இன்னும் மாற்றாமல் வைத்திருக்கிறேன்.

.
மேலும்