சென்னையில் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு ஆரம்பம்!

By செய்திப்பிரிவு

நடிகர் கமல்ஹாசன், ‘நாயகன்' படத்துக்குப் பிறகு மணிரத்னத்துடன் மீண்டும் இணைந்துள்ள படம், ‘தக் லைஃப்'.

த்ரிஷா, சிம்பு, அபிராமி, அசோக் செல்வன், இந்தி நடிகர் அலிஃபஸல், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

டெல்லியில் நடந்து வந்த இதன் படப்பிடிப்பு முடிவடைந்தது. அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.

தொடர்ந்து 17 நாட்கள் நடக்கும் இதன் படப்பிடிப்பில் கமல்ஹாசன், சிம்பு, அசோக் செல்வன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE