என்ன திட்டுகிறார்கள் - நயன்தாரா

By

நடிகை நயன்தாரா சமீபத்தில் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ‘அன்னபூரணி’ நடித்திருந்தார். இதில் ஜெய் ஜோடியாகவும் மற்றும் சத்யராஜா உள்ளிட்ட ஏராளமான நடிகர்-நடிகைகள் நடித்திருந்தனர். இப்படம் தற்போது, திரையரங்குகளில் திரையிடப்பட்டு ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்றுக்கொண்டிருக்கிறது. 

இதனிடையே, இந்தப்படத்தின் நடித்த படக்குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பு வைத்திருந்தனர். அதில், நடிகை நயன்தாரா பேசியபோது, “லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லாதீர்கள், அது சொன்னாலே என்னைத் திட்டுகிறார்கள். இன்னும் நான் அந்த இடத்துக்கு வரவில்லையா அல்லது பெண் என்ற காரணத்தினால் அது இருக்கக் கூடாது என நினைக்கிறார்களா எனத் தெரியவில்லை. மேலும், அவர் லேடி சூப்பர் ஸ்டார்  என்று 10 பேர் அழைத்தால், 50 பேர் திட்டுகிறார்கள். நான் செய்ய விரும்பும் கதைகள் எதுவும் அந்த டேகுக்காக கிடையாது. ரசிகர்கள் கொடுத்திருக்கும் அன்புக்காகத் தான் அதை எடுத்துக் கொண்டேன்”  என அவர் உருக்கமாக பேசினார். நடிகை நயன்தாராவின் இந்தப் பேச்சுதான் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE