கலைஞர் 100 விழா தேதி மாற்றம்

By

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா நாடு முழுவதும் அந்தக் கட்சியின் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் 'கலைஞர் 100 விழா' பிரமாண்டமாக நடத்தப்பட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. 

இதில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினி, கமல் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. வரும் 24-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருந்த 'கலைஞர் 100 விழா' தொடர் புயல் மற்றும் மழையின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ந்தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE