வெள்ளத்தில் சிக்கிய நடிகர் விஷ்ணு விஷால்

By செய்திப்பிரிவு

மிக்ஜாம் புயலால்  சென்னை, புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டியது. 

சென்னை மழை வெள்ளத்தில் சிக்கிய நடிகர் ஆமிர் கான் மற்றும் விஷ்ணு விஷாலை தீயணைப்பு துறையினர் காப்பாற்றினர். 

இது தொடர்பாக X பக்கத்தில் உதவி கேட்டு நடிகர் ஆமிர் கான் மற்றும் விஷ்ணு விஷாலும் பதிவிட்ட நிலையில் அவர்கள் தங்கியிருக்கும் காரப்பாக்கம் பகுதிக்கு  தீயணைப்பு படையினர் விஷ்ணு விஷால் மற்றும் அவரது மனைவி ஜுவாலா கட்டாவை படகில் மீட்டு கொண்டு வந்தனர். 

இதே படகில்  நடிகர் ஆமிர் கானும் மீட்கப்பட்டார். இந்த  புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE