கணவரை பிரிவதாக அறிவித்த ‘திரௌபதி’ பட நடிகை.!

By

வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை ஷீலா. இவர் ‘திரௌபதி’, ‘மண்டேலா’, ‘கும்பலங்கி நைட்ஸ்’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் ஏகாபத்த ஆதரவை பெற்று வந்தார்.  
இவர் நடிப்பது மட்டுமல்லாமல் பரதநாட்டிய கலைஞரும் ஆவார்.

சென்னையைச் சேர்ந்த கூத்து பட்டறையில் தியேட்டர் கலைஞராக பணியாற்ற தொடங்கிய அவர் பின்னர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நாளைய இயக்குனர்’ என்ற நிகழ்ச்சியில் குறும்படங்களில் நடித்து பிரபலமானார். இவர், ‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த தம்பி சோழர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது குறும்படத்தில் நடித்த கொண்டிருந்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. ஆனால் இவர்கள் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி கடந்த 2014ம் ஆண்டு கடலுக்கு நடுவில் வைத்து வித்தியாசமான முறையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஒன்பது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தற்போது தம்பி சோழரை பிரிந்து விட்டதாக ஷீலா ராஜ்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE