கோலாகலமாக நடைபெற்ற நடிகை ராதா மகள் திருமணம்

By செய்திப்பிரிவு

80-90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ராதா. இவர் பாரதிராஜா இயக்கிய  ‘அலைகள் ஓய்வதில்லை’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர். 

நடித்து கொண்டிருந்தபோது, மும்பை தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கார்த்திகா, துளசி என்ற மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

அதில், மூத்த மகளான கார்த்திகா, நடிகையாக 'கோ' என்ற படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து சில படங்களில் நடித்து  இருந்தார்.

இதனையடுத்து, கார்த்திகாவுக்கும், ரோகித் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.  இவர்களின் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE