காக்கா, கழுகு கதைகளால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை - லெஜண்ட் சரவணன்

By செய்திப்பிரிவு

 

பிரபல தொழிலதிபரும், நடிகருமான ‘லெஜண்ட’ சரவணன் அருள் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 5 அடுக்குகள் கொண்ட மாநில தலைமை அலுவலக கட்டிடம் திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் அவர் பேசிய பேச்சு தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதன் பேச்சின் சுருக்கம் இதோ, “எந்தவொரு நாட்டில் வியாபாரத் துறை செழிப்பாக உள்ளதோ அந்த நாட்டில் பொருளாதாரமும் மிக வலிமை மிக்கதாக இருக்கும். ஏனெனில் அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான பொருளாதார சுழற்சியில் இந்த வியாபாரத் துறை மிக முக்கிய பங்காற்றி வருகிறது. 
நம்நாட்டில் வியாபாரத் துறை செழிப்பாக இருந்தால், நம் நாட்டின் பொருளாதாரமும் பலமாக இருக்கும். இதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஒரு வெற்றிகரமான வியாபாரத்துக்கு அதில் உள்ள உண்மைத்தன்மையும், கடின உழைப்பும் தான் முக்கிய காரணமாக இருக்கும்.

தற்போது, மக்களின் அன்றாட பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக இருக்கும் சினிமாத்துறை மிக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் அதில், காக்கா, கழுகு கதைகள், இவருக்கு அந்த பட்டம், அவருக்கு இந்த பட்டம் போன்ற விஷயங்கள்... இதனால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் கிடையாது. நாம் உழைத்தால் மட்டுமே உயர முடியும். 
நாம் உயர்ந்தால் நம் நாடும் உயரும். உழைப்போம், உயர்வோம், நம் நாட்டையும் உயர்த்துவோம். அன்பால் இணைந்து செயல்படுவோம்” என அப்போது பேசி இருக்கிறார். இந்த பேச்சு தான் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE