லால் சலாம் படத்தின் உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட்!

By மினி சினி

நடிகர் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் லால் சலாம் படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் கைப்பற்றியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் படம் லால் சலாம். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்துக்கு இசை அமைக்கிறார்.
கிரிக்கெட்டை மையமாக வைத்து இந்த படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவாக்கி வருகிறார். படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றனர். இருப்பினும் ரஜினி நடிக்கிறார் என்பதால் இந்த படத்தின் மீது கவனம் பெற்றுள்ளது. 
இந்த படத்தின் தமிழ்நாட்டுக்கான வெளியீட்டு உரிமையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் வாங்கியுள்ளதாக படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது. லால் சலாம் படப் பிடிப்பு முடிந்து, பின்னணி வேலைகள் நடந்து வருகிறது. பெங்களுக்கு இந்த திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது!

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE