ரங்கோலி படப்பிடிப்பு நிறைவு.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

By

இயக்குனர் வசந்த்தின் உதவி இயக்குனராக பணிபுரிந்த வாலி மோகன்தாஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிய திரைப்படம் "ரங்கோலி". இப்படத்தினை கோபுரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக கே.பாபுரெட்டி மற்றும் ஜி.சதீஷ்குமார் தயாரிக்கிறது.

இத்திரைப்படத்தில் ஹமரேஷ் மற்றும் பிரார்த்தனா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹமரேஷ் நடிகர் உதயா மற்றும் இயக்குனர் விஜய் அவர்களின் சகோதரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ரங்கோலி இப்படத்திற்கு இசை-கேஸ்.எஸ்.சுந்தரமூர்த்தி, ஒளிப்பதிவு-மருதநாயகம் ஆகியோர் பணியாற்றுகிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கில் "ரங்கோலி" திரைப்படம் உருவாகியுள்ளது. 

சென்னை, ஐதராபாத் மற்றும் கேரளாவில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வந்த "ரங்கோலி" படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE