ஆஸ்கர் கௌரவம் பெற்ற சூர்யா - முதலமைச்சர் வாழ்த்து

By

2022-ஆம் ஆண்டிற்கான உறுப்பினர் தேர்வுக்கு ஆஸ்கர் குழு 397 பேருக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதில் இந்தியாவில் இருந்து நடிகர் சூர்யா மற்றும் நடிகை கஜோல் இடம் பெற்றுள்ளனர். திரையுலகில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. 

இந்த விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் உலகம் முழுவதும் இருந்து நான்காயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். ஆண்டு தோறும் ஆஸ்கர் கமிட்டியின் உறுப்பினர் விவரம் மாறுபடும். 

இதைத்தொடர்ந்து, 2022-ம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களுக்கான அழைப்பு 397 பேருக்கு விடுக்கப்பட்டிருந்தது. இதில் இந்தியாவில் இருந்து நடிகர் சூர்யா, நடிகை கஜோல் ஆகியோர் ஆஸ்கர் குழுவில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE