லைகா தயாரிப்பில் ‘சந்திரமுகி 2’ - அதிகாரபூர்வ அறிவிப்பு

By

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் கடந்த 2005-ம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் 'சந்திரமுகி'. பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள 'சந்திரமுகி' பிரமாண்ட வெற்றியைப் பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், 'சந்திரமுகி' இரண்டாம் பாகத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, பி.வாசு இயக்கும் இந்தப் படத்தை, லைகா நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார்.

முதல் பாகத்தைப்போல, இந்த படத்திலும் நடிகர் வடிவேலு நடிக்கிறார். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்கிறார். தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியிருக்கும் இந்த அறிவிப்பை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE