தி லெஜண்ட்சரவணன் அசத்தல் பேச்சு

By

லெஜண்ட் சரவணா ஸ்டோரின் உரிமையாளர் சரவணன் அருள் தயாரித்து, நடிக்கும் படம் தி லெஜண்ட். இந்தப் படத்தை
உல்லாசம், விசில் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்களான ஜேடி - ஜெர்ரி ஆகியோர் இயக்கி உள்ளனர். மேலும், இசை ஹரிஜெய்ராஜ் மற்றும் மறைந்த நடிகர் விவேக், மயில்சாமி, பிரபு, நாசர், சச்சு, ரோபோ சங்கர், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு சொகுசு காரில், பிளாக் அண்ட் பிளாக்கில் மாஸாக வந்து இறங்கிய லெஜண்ட் சரவணனை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்டனர். அப்போது,பேசிய சரவணன் 'தி லெஜண்ட்'இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இதில் செய்தியாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் என்றார்.

இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும் என்பதில் எனக்கு மிகவும் நம்பிக்கை இருக்கிறது. இந்தபடத்தை பார்ப்பவர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய வகையில் இந்த படத்தில் ஒரு மெசேஜ் இருக்கு. அதுமட்டும் இல்லாமல் மாஸ் ஆக்ஷன்,காதல், காமெடி,ரொமான்ஸ் அனைத்தும் கலந்த ஒரு ஆக்ஷன் திரைப்படம் இது என்றார். பெரும் பொருட் செலவில் ஒரு பான் இந்திய திரைப்படமாக உருவாகி உள்ளது. இந்தியாவுக்கே ஓர் எடுத்துக்காட்டாக இப்படம் இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்றார்.

சினிமாவில் உங்களின் இலக்கு என்ன என்ற கேள்விக்கு, இலக்கு என்பது மனிதன் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. சினிமாவின் என்னுடைய பயணத்தில் இது முதற்கட்டம். இப்படத்தின் வெற்றி அடுத்த கட்டத்தை உருவாக்கி கொடுக்கும் என்றார். சினிமாவின் உங்களின் ரோல் மாடல் யார் என்று ஒரு செய்தியாளர் கேட்க, ரஜினி சார் விஜய் சார் தான் என் ரோல் மாடல் மேலும் அவர் கூறி செய்தியாளர்களை அசத்தினார்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE