சினிமாவிற்கு வரும் நடிகை குஷ்பு மகள்

By

தமிழ்த்திரையுலகில் ஒவ்வொரு நாளும் ஏராளமான  நட்சத்திரங்களின் வாரிசுகள் வந்து வெற்றி பெற்று வருகின்றனர். இந்நிலையில், நட்சத்திர தம்பதியரான இயக்குனர் சுந்தர் சி - நடிகை குஷ்புவின் மூத்த மகள் அவந்திகா  தனது நடிப்பு பயிற்சியை முடித்து விட்டு சினிமா துறையில் களமிறங்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.
 நடிகை குஷ்பு இது குறித்து தனது டுவிட்டர் பதிவில், ‛‛என்னோட மூத்த மகள் லண்டனில் உள்ள சிறந்த நடிப்பு பயிற்சி பள்ளியில் தனது படிப்பை முடித்துவிட்டார். அடுத்ததாக அவர் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கவுள்ளார். ஆனால், அவரை நாங்கள் அறிமுகமோ அல்லது பரிந்துரையோ செய்யப்போவதில்லை. நீங்கள் அவரை வாழ்த்தவேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
 

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE