திரைக்கு வரும் அமலாபால் திரைப்படம்

By

நடிகை அமலா பால் கதாநாயகியாக நடிக்கும் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் ‘அதோ அந்த பறவை போல’ திரைப்படம் வெளியாக தயாராகி உள்ளது.

செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் ‘அதோ அந்த பறவை போல’. அமலா பால் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார், பிரவீன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  

நீண்ட இடைவேளைக்கு பிறகு இத்திரைப்படத்தை வி ஸ்கொயர் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக வெளியிடுகின்றனர். இப்படம் விரைவில் வெளியாகும் எனவும் படம் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE