அஜித்தின் 61வது படம் பூஜையுடன் படப்பிடிப்பு- இன்று தொடக்கம்

By

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையா எச்.வினோத் டைரக்‌ஷனில் அஜித் நடிக்கும். படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையில் இந்த படத்தின் பாடல்கள் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த படத்திற்காக இரண்டு பாடல்களுக்கு ஜிப்ரான் இசையமைச்சுட்டாராம். 

நிரவ் ஷா ஒளிப்பதிவாளராக பணியாற்றவுள்ள இப் படத்தில் பிக்பாஸ் மூலம் பிரபலமான கவின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அதோடு தென்னிந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களும் இந்த படத்தில் இணையவுள்ளனராம். 

அஜித் கல்லூரி பேராசிரியராக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் இன்னிக்கு காலை இன்னும் கொஞ்ச நேரத்தில் துவங்கவுள்ளதாக உறுதியான தகவல்கள் வந்துருக்குது. 

ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் எச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.   இப் படத்திற்காக ராமோஜி பிலிம் சிட்டியில் மவுண்ட் ரோடு போன்று செட் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.  அங்குதான் முதன்முதலில் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாக்கும்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE