தலையின் அடுத்த பட லுக் - வைரலாகும் புகைப்படம்

By

நடிகர் அஜித்குமார் பட அப்டெட் என்றால் அவரது ரசிகர்களுக்கு எப்பொழுதும் கொண்டாட்டடம் தான். நடிகர் அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனைத்தொடர்ந்து, மீண்டும் அஜித்தின் புதிய திரைப்படத்தையும் (ஏகே 61) வினோத்  இயக்குகிறார்,

இந்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் 9-ம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அப்படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர் அஜித்தின் புதிய லுக்கை போனிக்கபூர் தற்போது வெளியிட்டுள்ளார். 

அந்தப் புகைப்படம்தான் தற்போது அவரது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அந்தப் புகைப் படத்தில் நடிகர் அஜித், காதில் கடுக்கன், பெரிய கண்ணாடி, வெள்ளை தாடி, வெள்ளை தலை முடி, கருப்பு நிற கோட் அணிந்து வித்தியாசமான லுக்குடன் அஜித் இருக்கும் வீடியோ சமீபத்தில் வைரலானது. 

அந்த கெட்டப்பில் தான் அஜித் புதிய படத்தில் தோன்ற உள்ளார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது டார்க் ஷேட் புகைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக போட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE