நடிகர் விஜயின் பீஸ்ட் படத்தின் சிங்கிள் புரமோ - உற்சாகதத்தில் ரசிகர்கள்

By

பல வெற்றிப்படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் விரைவில் இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட் நேற்று வெளியிடப்பட்டது. பர்ஸ்ட் சிங்கள் புரமோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். முழு பாடல் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE