ஜீன்ஸ் - டி.ஷர்ட்டில் வைரலாகும் நடிகை குஷ்பு புகைப்படம்

By

ரஜினி, கமல், விஜயகாந்த் என பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து 90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு . இவருக்கு கோவில் கட்டும் அளவிற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு இருந்தார் நடிகை குஷ்பு. இவர் தற்போது வெள்ளித்திரை, சின்னத்திரை மற்றும் அரசியல் கட்சி என படுபிசியாக செயல்பட்டு வருகிறார்.

இவர் கடந்த சில மாதங்களாகவே தனது உடல் எடையை குறைக்க தீவிரமான பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார். இவரது முயற்சிக்கு பலனாகபடு மாடலான லுக்கில் இன்றைய கதாநாயகிகளுக்கு சவால் விடும் அளவிற்கு இளமையான தோற்றத்திற்கு சமீபத்தில் மாறினார்.

அதன்பின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது ஜீன்ஸ், டி.ஷர்ட் அணிந்து இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE