சூர்யாவின் 40வது படத்தின் டைட்டில் ‘மாஸ்’ஆக இருக்கும்!

By

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் படத்தின் பெயர் மாஸ்.ஆக இருக்கும் என்று இயக்குநர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.

படத்தின் 35% படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும், கொரோனா ஊரடங்கு முடிந்ததும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகவும், அதற்கு தனது படக்குழு தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும் ஜூலை மாதம் வரைக்கும் ரசிகளை காத்திருக்கமாறும் கூறியிருக்கிறார்.

இந்தப்படம் சூர்யாவின் 40வது படமாக உருவாகிறது. இந்தப்படத்தில் பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், இளவரசு உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE