வீட்டிலேயே கொரோனா தடுப்பூசிப் போட்டுக் கொண்டு நடிகர் ரஜினிகாந்த்!

By

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு பணிகள் மற்றும் கரோனா தடுப்பூசிப் போடும் பணிகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. மேலும், மாநில, யூனியன் பிரதேச அரசுகளுடன் மத்திய அரசு அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறது. அதேபோல், பிரதமர் நரேந்திர மோடியும் உயர் அதிகாரிகளுடன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஆக்சிஜன் விநியோகம், கொரோனா தடுப்பூசி விநியோகம் ஆகியவைக் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

மற்றொரு புறம், இந்திய விளையாட்டு வீரர்கள், முன்னணி நடிகர்கள், நடிகைகள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டு, அந்த புகைப்படங்களை ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த 'அண்ணாத்த' படப்பிடிப்பை முடித்துக் கொண்டு நடிகர் ரஜினிகாந்த் நேற்று (12/05/2021) தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

அதன் தொடர்ச்சியாக, இன்று (13/05/2021) சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டார். இந்த தகவலை நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE