பெரிய ஹீரோக்களுடன் சாயிஷா!

By சினி மினி

’வனமகன்’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சாயிஷா. ‘ஜூங்கா’, ‘கஜினிகாந்த்’, ‘காப்பான்’ படங்களில் நடித்தார். 

நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்த நடிகை சாயிஷா, திருமணத்துக்குப்பின் ‘டெடி’ என்ற படத்தில்  கணவர் ஆர்யாவுடன் ஜோடியாக நடித்தார். பின்னர் கன்னட மொழியில் ‘யுவரத்னா’ படத்தில் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக நடிக்கிறார். 

தெலுங்கு மொழியில் என்.டி.பாலகிருஷ்ணாவின் 106-வது படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் சாயிஷா.

திருமணத்துக்குப் பின் பெரிய ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சிதான் என்கிறார் சாயிஷா.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE