காஜல் அகர்வால் திருமணம் வீட்டில் எளிமையாக நடந்தது!

By சினி மினி

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான காஜல் அகர்வாலின் திருமணம் வீட்டிலேயே சிறப்பாக நடந்து முடிந்தது.

நடிகை காஜல் அகர்வாலுக்கும் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவுக்கும் நிச்சயம் செய்யப்பட்டு பின்னர் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் திருமணத்தை நடத்த திட்டமிட்டனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால், திருமணத்தை பிரமாண்டமாக நடத்த முடியாமல் அவரது வீட்டிலேயே நடத்தி முடித்தார். காஜலின் திருமணத்தில் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


 

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE