எதற்கும் துணிந்தவன் விழா மேடையில் நடிகர் சூர்யாவை புகழ்ந்த நடிகர் ராணா

By

எதற்கும் துணிந்தவன்'படம் மார்ச் 10-ம் தேதி இப்பத்திய ட்ரெண்டிகாகி வரும் பான் இந்தியா அளவில் வெளியாக போகுது. அதுனாலே படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில்  தெலுங்கு ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர் ஹைதராபாத் சென்றனர். 

அந்த விழாவில் ராணா, அகண்டா இயக்குனர் போயப்பட்டி ஸ்ரீனு உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். 

அப்போது பேசிய ராணா "பத்து வருசங்களுக்கு முன்னாடி நான் நடிச்ச  ஒருபடத்தை பார்க்க சூர்யா எடிட்டிங் ரூமுக்கு வந்தார். அந்தப் படத்தை பார்த்த பின்னர் சூர்யா  எதுவும் சொல்லாம என்னை காரில் ஏற்றிக்கொண்டு ஹைதராபாத்தை வீதிகளில் நான்கு மணி நேரம் விடாமல் சுற்றினார். 

அப்பதான் மெல்ல என்கிட்டே உண்மையா இந்த படத்தில் நீ நடிக்கவே இல்லை..  வெறுமனே சமாளித்திருக்கிறாய் அப்படீன்னு ஓப்பனா சொன்னார் . கூடவே அந்த 4 மணி நேரமும் அவர் எனக்கு எடுத்த பாடம்தான் எனக்கு பாகுபலியின் பல்லால தேவா மற்றும் பீம்லா நாயக்கில் டேனியல் சேகர் உள்ளிட்ட கதாபாத்திரங்களை செய்யமாறு மெருகேற்றினார். ராணா இப்படி பேசி கொண்டிருக்கும் போதே சூர்யா ராணாவை ஓடி போய் கட்டியணைச்சுக்கிட்டார். 

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE