விஜய்யின் 'கில்லி' ஏப்ரல் 17ம் தேதி 4K தரத்தில் ரீ ரிலீஸ்

By செய்திப்பிரிவு

கில்லி திரைப்படம் ஏப்ரல் 17ம் தேதி 4K தரத்தில் ரீ ரிலீஸாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான திரைப்படமான கில்லி ரீ ரிலீஸ் ஆவது குறித்து தகவல் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

இயக்குநர் தரணியின் இயக்கத்தில் வித்யாசாகரின் இசையில் நடிகர் விஜய் மற்றும் அவருக்கு ஜோடியாக த்ரிஷா, பிரகாஷ் ராஜ் ஆகியோரின் நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான கில்லி வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

 

இந்நிலையில், கில்லி திரைப்படம் ரீ ரிலீஸாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. அந்த வகையில், இப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு டிஜிட்டல் முறையில் உலகம் முழுவதும் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது. இத்திரைப்படம், 2004ம் ஆண்டு ஏப்ரல் 14ந் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு கில்லி படத்தை அதே தேதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

 

மீண்டும் களமிங்கும் கில்லி

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE