இன்று உலக அளவில் பிரபலமாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆணிவேர் ஜான் டி மோல் ஜூனியர் (John de Mol JR) என்பவரால் நெதர்லாந்தில் உருவாக்கப்பட்ட பிக் பிரதர் என்ற நிகழ்ச்சியின் மூலம் வந்தது தான். நெதர்லாந்தில் முதல்முறையாக ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி தான் உலக அளவில் பெரும் வெற்றியைப் பெற்றது. இந்த நிகழ்ச்சியினுடைய அடிப்படை ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell) எழுதிய புகழ்பெற்ற Nineteen Eighty Four என்ற நாவலில் வரும் பிக் பிரதர் என்ற கதாபாத்திரத்தில் இருந்து ஈர்க்கப்பட்டது.
அதாவது ஒரு சர்வதிகாரத்தின் கீழ் மக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக எழுதப்பட்டிருக்கிறது. அதேபோல்தான் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களை 24 மணி நேரம் கேமராக்கள் மற்றும் மைக்ரோஃபோன்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. இந்த நாவலை அடிப்படையாக வைத்து தான் பிக் பிரதர் நிகழ்ச்சி எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அதற்கு பிறகு தான் இந்த நிகழ்ச்சி பிக் பாஸ் ஆக மாறியது. இந்தியா போன்ற நாடுகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 2006 ஆம் ஆண்டு ஹிந்தியில் தான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதுவரை 18 சீசன்கள் முடிந்து 19-வது சீசன் நடந்து கொண்டிருக்கிறது.
தமிழில் 2017ல் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 8 சீசன் முடிவடைந்து தற்போது ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாக இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக ஒரு பெரிய கூட்டமே வேலை பார்க்கிறது என்று எல்லோரும் தெரியும். ஆனால், அது எப்படி செயல்படுகிறது என்பது தான் தெரியாது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுமார் 100க்கும் மேற்பட்ட கேமராக்கள் வைக்கப்பட்டிருக்கிறது. தானியங்கி கேமராக்கள், மனிதர்களால் இயக்கப்படும் கேமராக்கள் என்று இருவிதங்களில் செயல்படுகிறது. போட்டியாளர்களின் ஒவ்வொரு அசைவையும் உரையாடல்களையும் பதிவு செய்ய 24 மணி நேரமும் செயல்படுகின்றது.
-
பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த தகவல்:
சுமார் 450 பேர் கொண்ட குழு தான் இந்த நிகழ்ச்சிக்காக வேலை செய்கிறார்கள். இதில் கேமராமேன்கள், எடிட்டர்கள், தயாரிப்பு குழுவினர் என பலருமே அடங்குவார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் செட்டை கருப்பு நிற திரையால் மறைக்கப்பட்ட ஒரு வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளதாகும். உள்ளே இருப்பவர்களுக்கு வெளியே ஆள் இருப்பது தெரியாத வண்ணம் இந்த திரை இருக்கிறது. ஒட்டுமொத்தமாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது வெறும் பொழுதுபோக்கு என்பதை தாண்டி ஒரு சமூக நிகழ்வாக மாறி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புதிய போட்டியாளர்கள், புதிய விவாதங்கள், புதிய தொகுப்பாளர்களுடன் இந்திய தொலைக்காட்சியில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி நிலைத்து வருகிறது.