13 ஆண்டுக்கு பிறகு திரைபடத்தில் நடித்துள்ள விஜயசாந்தி

By செய்திப்பிரிவு

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்தவர் நடிகை விஜயசாந்தி. 1998-ம் ஆண்டு 

முதல்  அரசியல் களத்தில் பணியாற்றி வருகிறார்.

 

அரசியலுக்குச் சென்றதால் கடந்த 13 ஆண்டுகளாக திரைப்படங்களில் தலைகாட்டாமல் இருந்த விஜயசாந்தி தற்போது பிரபல நடிகர் மகேஷ் பாபுவுக்கு தாயாக நடித்துள்ளார்.

 

நல்ல கதைகள் அமையாததால் நடிக்காமல் இருந்தேன். மகேஷ் பாபுவுடன் நடிக்கும் படத்தில் கதையில் எனக்கு முக்கியத்துவம் இருந்ததால் சம்மதித்தேன்.

 

நல்ல கதாபாத்திரம் அமைந்தால் ஆண்டுக்கு ஒன்றிரண்டு படங்களில் நடிப்பேன். எனக்கு குழந்தைகள் மிகவும் பிடிக்கும். ஆனால் குழந்தைகள் இருந்தால் சுயநலம் வந்துவிடும்.

 

சுயநலமிருந்தால் அரசியலில் பொது தொண்டு செய்ய முடியாது. எனவே தான் என் கணவரிடம் குழந்தைகள் வேண்டாம் என்று கூறினேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டார்.

 

ஜெயலலிதாவும் குழந்தை, குடும்பம் இல்லாமல் சுயநலமின்றி மக்களுக்கு தொண்டு செய்தார். அவரைப் போல் அரசியலில் இருக்கவேண்டும் என்பதற்காகவே குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை.”என்றார்.

 

நன்றி நியூஸ்18

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE