மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதி அறிவிப்பு

By

மணிரத்னம் இயக்கத்தில், ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி,  பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற நட்சத்திரங்கள் நடிக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை மணிரத்னம் இயக்கி வருகிறார். இப்படத்தை லைகா நிறுவனம் வழங்க மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன்-1” வருகிற செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மேலும், இந்தப் படத்தில் இடம்பெறும் கதாப்பாத்திரத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இது சமூக வலைத்தளத்தில்  வைரலாக பரவி வருகிறது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE